உலகம்

போராட்டத்திற்கு மத்தியில் இளைஞர்களைக் கவர இந்திய பிரதமர் கையாண்ட விசித்திர உத்தி!

இந்தியாவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மோடி அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பலைகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது.

கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) என்ற இளைஞர் அரசியல் இயக்கம், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வீதியில் இறங்கிப் போராடி வருவதே இதற்குக் காரணமாகும்.

இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காகப் பிரதமர் மோடி நேற்று ஒரு விசித்திரமான உத்தியைக் கையாண்டிருந்தார்.

ஊடகங்கள் விடயத்தில் மிகவும் கவனமாகச் செயல்படும் அவர், இளைஞர்களைக் கவரும் வகையில் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) பாணியிலான ‘செல்ஃபி’ வீடியோ ஒன்றைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தார்.

மோடியின் வழக்கமான வீடியோக்களைப் போலத் துல்லியமாகவும் நிலையான கெமரா கோணத்திலும் இல்லாமல், ஒரு தொடக்கநிலை அமைப்பிலேயே (amateur style) அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது.

அந்த வீடியோ இதுவரை 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த அமோக வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி  ஒரு வீடியோவை ‘இன்ஸ்டாகிராம்’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் இளைஞர்களைச் சென்றடையும் இத்தகைய முறைகள் குறித்துக் கவனம் செலுத்துமாறு பிரதமர் மோடி தனது அமைச்சரவைக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button