இலங்கை

மழை அங்கியுடன் காணப்படும் இந்த எலும்புக் கூட்டை அடையாளம் காண உதவுங்கள்

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் இனம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவனோ / சிறுமியோ என கருதப்படும் என்புக்கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள் தெரிந்திருந்தால், அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த என்புக்கூடு தொடர்பில் சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் , அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் , நீதிமன்ற பதிவாளருக்கோ , சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்கோ , காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள் சில வெளிப்படலாம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button