இலங்கை

செம்மணி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – ஆகஸ்ட் 4 முதல் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 42ஆவது நாளான  (24.07.2026) புதிதாக 01 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு என்புகூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று என்புக் கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 437ஆவது என்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன்இ சில ஆணிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 480 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 479 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை செம்மணி அகழ்வு பணிகள் இன்றைய தினம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button