உலகம்

பயங்கரவாத தாக்குதலில் இருந்த மக்களை காத்த இந்தியருக்கு குடியுரிமை வழங்கியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா சிட்னி Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது, தனது உயிரைப் பணயம் வைத்து சுமார் 20 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்சி சாரதிக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் நிரந்தர குடியுரிமை (PR) வழங்கி கௌரவித்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 37 வயதான ரஹ்மத் பாஷா என்பவரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி 15 பேர் பலியான இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, ரஹ்மத் பாஷா , துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் தைரியமாகச் செயற்பட்டு, படுகாயம் அடைந்தவர்களை அவசர ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றினார்.

இவரது இந்த அதிரடி நடவடிக்கையினால் 18 முதல் 20 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகப் பாராட்டப்பட்டது.

அத்துடன் அவசர உதவிப் படையினர் சம்பவ இடத்திற்கு வரும் வரை, பயந்து நடுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் அவர் கூடவே இருந்தார்.

இவரது இந்த இ வீரத்தையும் மனிதநேயத்தையும் அங்கீகரிக்கும் வகையில், ஆஸ்திரேலிய அதிகாரிகள் அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளனர். மேலும், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கான நிரந்தர குடியுரிமை விண்ணப்பங்களும் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது அவர் அணிந்திருந்த தொப்பி சிட்னி அருங்காட்சியகத்தில் (Sydney Museum) காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன், பல வீரம் மற்றும் சேவைக்கான விருதுகளுக்கும் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button