பலதும் பத்தும்

சாம்பார் வைத்த மனைவி – பொலிஸிற்கு போன் செய்த கணவன்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு, பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும். ஆனால் அவரது மனைவி தினமும் சாம்பார் வைத்து உணவு பரிமாறி வந்தார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி இரவு சாம்பார் வைத்ததால் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் நள்ளிரவு வரை கடுமையாக வாக்குவாதம் செய்தனர். எவ்வளவு சொல்லியும் மனைவி தன் பேச்சைக் கேட்காததால் கோபமடைந்த கணவர், இறுதியாக 112 என்ற அவசர சேவை எண்ணை அழைத்து பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

குடும்பத்தில் சண்டை நடப்பதாகத் தகவல் கிடைத்ததும், பொலிஸார் பதறியபடி உடனடியாக கிராமத்திற்கு சென்றனர்.

கிராமத்திற்கு வந்த பொலிஸார் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தனக்கு தினமும் பொறித்த குழம்பு வேண்டும் என்றும், ஆனால் தன் மனைவி எப்போதும் சாம்பார் போன்றவற்றை செய்து தன்னைப் புறக்கணிப்பதாகவும் கணவர் கூறினார்.

பின்னர், பொலிஸார் அவர்கள் இருவரையும் அமர வைத்து அமைதியாகப் பேச வைத்தனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் இது குறித்து விவாதித்து, ஒரு சிறிய விஷயத்தைப் பெரிய சண்டையாக மாற்ற வேண்டாம். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நடுராத்திரியில் இப்படி பண்றீங்களேம்மா என்று தலையில் அடித்தபடி அறிவுரை கூறினர்.

கணவன் – மனைவி இருவரும் ஒருவழியாக சமரசத்திற்கு வந்த பிறகு, பொலிஸார் புகாரை முடித்து வைத்தனர். குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து பொலிஸில் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button