பலதும் பத்தும்

போலந்து முதல் இத்தாலி வரை – 06 நாடுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நடை பாதை

போலந்தின் பால்டிக் கடற்கரையிலிருந்து இத்தாலியின் ஏட்ரியாடிக் கடல் வரை ஆறு நாடுகளை இணைக்கும் நடைபாதையொன்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வோல்ஃப் டிரெயில்’ (Wolf Trail) என்றழைக்கப்படும் இந்த பாதையானது சுமார் 2,000 மைல் நீளம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நிறுவனமான ஜாக் வோல்ஃப்ஸ்கின் (Jack Wolfskin) வடிவமைத்த இந்த பாதையானது, போலந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் சுலோவீனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த முழுப் பாதையிலும் பயணிக்கும் மலையேறுபவர்கள் 78,416 மீட்டர் (257 அடி) உயரத்திற்கு ஏறுவார்கள், இது எவரெஸ்ட் சிகரத்தில் ஒன்பது முறை ஏறுவதற்கு ஒப்பானதாகும். இந்தப் பயணத்தை முழுமையாக முடிக்க நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் மலையேறுபவர்களுக்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவுள்ள இந்தபாதையானது, ஏற்கனவே உள்ள பாதைகளை இணைத்து, குறுகிய பயணங்களுக்காக ஏழு தனித்தனிப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அத்துடன் இது E1, E9 மற்றும் வியா அல்பினா போன்ற முக்கிய ஐரோப்பியப் பாதைகளை இணைக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button