உலகம்

நச்சு வாயு கசிவால் சுரங்க பாதையில் ஏற்பட்ட விபத்து – 10 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் உள்ள ஒரு நீர்மின் திட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 17 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இமயமலைப் பகுதியில், பூட்டான் மற்றும் திபெத் எல்லையருகே உள்ள சமர்துங் கிராமத்தில், நேற்று இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான தேசிய நீர்மின் சக்தி கழகத்தின் (NHPC) 500 மெகாவாட் திட்டத்திற்காக, டீஸ்டா ஆற்றின் மீது கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சுரங்கப்பாதையில் உள்ள பாறைகளில் சிக்கியிருந்த அல்லது புதைந்திருந்த மீத்தேன் வாயு என சந்தேகிக்கப்படும் வாயு திடீரென வெளியேறியதே இந்த வெடிப்புக்குக் காரணம் என்று NHPC அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

17 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில், இதுவரை பத்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நச்சு வாயு கசிவு காரணமாக மீட்புக் குழுவினர் சுரங்கப் பாதையின் உள்ளே செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button