பலதும் பத்தும்

கூகுள் மேப்ஸ் செயலி குறித்து வெளியான அறிவிப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மிகவும் சவாலான மலைப்பாதையில் ஆபத்தில் சிக்கிய மலைப்பயணிகள் சிலர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட கூகுள் மேப்ஸ் செயலியை மட்டுமே நம்பியிருந்ததே இந்த ஆபத்திற்கு முக்கியக் காரணம் என தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கரடுமுரடான காட்டுப் பாதைகள் மற்றும் மலைப் பகுதிகளுக்குச் செல்லும் போது கூகுள் மேப்ஸை முழுமையாக நம்ப வேண்டாம் என ‘லயன்ஸ் பே தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர்’ பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட பயணிகள் பயன்படுத்திய கூகுள் மேப்ஸ் வரைபடத்தின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள மீட்புக் குழுவினர், கூகுள் மேப்ஸால் ஏற்படும் இதுபோன்ற ஆபத்துகள் இது முதன்முறையல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர்.

‘ஹவ் சவுண்ட் கிரெஸ்ட்’ பாதையின் ஒரு பகுதியைக் கடக்க 5 மணி நேரமும் 13 நிமிடங்களும் மட்டுமே ஆகும் என கூகுள் மேப்ஸ் காட்டியிருந்தது.

18 கிலோமீட்டர் நீளமுடைய அந்தப் பாதையானது 1,300 மீட்டருக்கும் அதிகமான செங்குத்தான ஏற்ற இறக்கங்கள், பாறைகள் நிறைந்த பகுதிகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டது.

இந்த மலையேற்றத்தை முழுமையாகக் கடக்க உண்மையில் 12 முதல் 14 மணி நேரம் வரை ஆகும். பயணக் காலம் குறித்து தவறான தகவல்களை நம்புவது தொடர்ச்சியான பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என மீட்புக் குழு எச்சரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button