காட்டு விலங்குகளை குறிவைக்கும் கடலோர சிங்கங்கள்

குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் ஆசிய சிங்கங்கள், மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகளை விட காட்டு விலங்குகளை (சுமார் 70 விகிதம் ) அதிகம் வேட்டையாடி உண்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதில் 30 விகிதம் மட்டுமே கால்நடைகளை உணவாக்குகின்றன.
2024 ஆம் ஆண்டில் 160 சிங்கங்களின் கழிவுகளைச் சேகரித்து ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலோரப் பகுதி சிங்கங்களின் முதன்மை உணவாக நீல்காய் (ப்ளூ புல்) மான்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் காட்டுப் பன்றிகளும், கால்நடைகளில் மாடுகளும் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன.
விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் நீல்காய் மான்கள் மற்றும் காட்டுப் பன்றிகளைச் சிங்கங்கள் வேட்டையாடுவதால், அவை மறைமுகமாக விவசாயிகளுக்கு உதவி செய்கின்றன.
அத்துடன், 2025ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குஜராத்தில் மொத்தம் 891 ஆசிய சிங்கங்கள் உள்ளன. இதில் 100க்கும் மேற்பட்டவை சௌராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றன. கிர் காடுகளுக்கு அப்பாலும் சிங்கங்கள் கால்நடைகளைச் சார்ந்திராமல் காடுகளுக்கு வெளியே தங்களைத் மாற்றிக் கொண்டு வாழ்வது, மாநில அரசின் பாதுகாப்பு உத்திகளின் வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.
![]()