எதிர்க் கட்சியிலிருந்தும் தற்கொலைகள் நடக்கலாம்; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகிறார்

எதிர்க் கட்சியில் பெரும்பாலானவர்கள் நீதிமன்ற பிணையிலேயே உள்ளனர் என்றும் அதனால் எதிர்காலத்தில் மேலும் தற்கொலை சம்பவங்கள் வெளிவரலாம் என பிரதி விவசாய அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சியில் ஒரு தரப்பினர் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருவதுடன் மேலும் ஒரு தொகையினர் கியூ வரிசையில் உள்ளனர். உண்மையில் ராஜபக்ச குடும்பத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இல்லாத ஒருவர் இருப்பாரானால் ஊடகவியலாளர்கள் அவரது பெயரைக் கூற முடியும்.
அந்த வகையில் எதிர்காலத்தில் மேலும் எதிர்க் கட்சி தரப்பினர் சிறை செல்ல நேரும் என்றும் அதற்கு முன்னர் மேலும் தற்கொலை சம்பவங்கள் இடம்பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
![]()