பேச்சுரிமை பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது; அரசுக்கு எதிராக வாக்கு மூலம் வழங்கினால் உயிர் பறிபோகும்!

அரசாங்கத்துக்கு எதிராக வாக்குமூலமளிப்பவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் அல்லது மர்மமான முறையில் உயிரிழக்கும் அச்சுறுத்தலான சூழலே தற்போது காணப்படுகிறது. பேச்சுரிமைக்கு எதிராக இந்த அபாயகரமான நெருக்கடியை எதிர்கொள்ள சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், அவர்களை பாதுகாப்பதற்கும் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.மாறாக அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே செயற்படுகிறது.
வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் தற்கொலைகள் இடமபெறுகின்றன.இன்னும் எத்தனைப் பேர் தற்கொலை செய்துக் கொள்வார்களோ தெரியவில்லை என்று அரசாங்கம் குறிப்பிடுவது சர்வாதிகார ஆட்சியியலின் தன்மையை வெளிப்படுத்துகிறது.
அரசாங்கத்துக்கு எதிராக வாக்குமூலமளிப்பவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் அல்லது மர்மமான முறையில் உயிரிழக்கும் அச்சுறுத்தலான சூழலே தற்போது காணப்படுகிறது. பேச்சுரிமைக்கு எதிராக இந்த அபாயகரமான நெருக்கடியை எதிர்கொள்ள சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது. இதற்கு முடிவு காண வேண்டும் என்றார்.
![]()