பலதும் பத்தும்

திருமணத்தை தடுக்க இளம் பெண் மொட்டை?

கேரளாவைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம்பெண், தனது அழகான தலைமுடியை முழுமையாக மொட்டை அடித்துக் கொண்ட வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தனது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ததால், அதைத் தடுப்பதற்காகவே தான் மொட்டை அடித்துக் கொண்டதாக அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விசித்திரமான பதிவு இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் பல்வேறு எதிர்ப்புகளையும் கிளப்பியது.

இணையத்தில் எழுந்த பெரும் சர்ச்சையைத் தொடர்ந்து, தான் பதிவிட்ட காரணம் அப்பட்டமான பொய் என்பதை கீர்த்தனா தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். வழக்கம்போல் கோவிலில் நேர்த்திக்கடனாகவே முடி காணிக்கை செலுத்தியதாகவும், திருமண வயதில் இருக்கும் தனக்கு அது வேடிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவே அத்தகைய தலைப்பை வைத்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அவரது இந்தச் செயலைக் கண்டு வியந்த பல இளம்பெண்கள், “தமக்கும் இத்தகைய தைரியம் வேண்டும்” என அவரது பதிவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button