நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் அரசைக் கவிழ்க்கும் சதி!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னணியில், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ஒரு சதி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
தன் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகளைக் கூட அரசால் பாதுகாக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தற்போதைய அரசால் பாதுகாப்பு வழங்க இயலாதது என்றல்ல. தீர்க்கப்பட்ட ஒரு மோதல் மீண்டும் தலைதூக்கியதற்கும், பல அரசு ஊழியர்களின் உயிர் இழப்புக்கும் பின்னணியில் உள்ள சதி என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும்
இந்த அரசை கவிழ்த்து, எந்த வழியிலாவது அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பும் நபர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு குழுவும் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் ஒரு கட்டத்தில் நீதிமன்றத்துக்கு அழைக்கப் படுவார்கள், அவர்கள் அங்கு சென்றே ஆக வேண்டும்.
தொடர்ந்தும் இந்த அரசுக்கு எதிராகச் சதி செய்து, அரசை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடும் ஒரு குழு பல்வேறு சதித் திட்டங்களுடன் உள்ளது. ஆகவே, அப்படிப்பட்ட ஒரு குழு இருக்கும்போது, திட்டமிட்ட சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பது சாத்தியமற்றது.
ஆனாலும் மக்களின் பெரும் அதறவைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதென்பது சாத்தியமான ஒன்றல்ல எனவும் தெரிவித்தார்.
![]()