கவிதைகள்

பெருகுதல்… கவிதை…. முத்தழகு கவியரசன் , திருநெல்வேலி

திரைகள் பெருகும் பொது
குழந்தைப் பருவம்
காணாமல் போகிறது.

மதிப்பெண்கள் பெருகும் போது
அறிவுகள்
விற்பனை ஆகிறது.

பணம் பெருகும் போது
உறவுகள்
இசைவிற்குள் நுழைகின்றன.

போதை பெருகும் போது
குடும்பம்
தலைவிரித்தாடுகிறது.

ஆசைகள் பெருகும் போது
நிம்மதி
கேள்வியாகிறது.

கனவுகள் பெருகும் போது
நித்திரை
நிதானத்தை இழக்கிறது.

சிலைகள் பெருகும் போது
சிந்தனைகள்
சாகின்றன.

போட்டி பெருகும் போது
நட்பு
சிதறி விடுகிறது.

அதிகாரம் பெருகும் போது
அறம்
மரித்துப் போகிறது.

ஏமாற்றங்கள் பெருகும் போது
நினைவுகள் மட்டுமே
மிஞ்சுகின்றன.

நரை பெருகும் போது
வாழ்க்கையின் அர்த்தங்கள்
கைக்கோர்க்கின்றன.

முத்தழகு கவியரசன் , திருநெல்வேலி

 

Loading

3 Comments

  1. பெருக்கமும் சுருக்கமும் உலக நியதி ஓரணு பிரபஞ்சமாக பெருகியதும் இந்த பிரபஞ்சமே ஓர் அணுவாக சுருங்குவதும் இந்திய பிரபஞ்ச தத்துவம்
    சிந்தனையை தூண்டும் கவிதை பெருக்குதல் மொழிக்கு நலம்.

    1. பேரன்புடன்..

      தங்களின் விமர்சனம் இன்னும் எழுத உந்துதலை தருகிறது. மிக்க நன்றி ஐயா 💖

  2. பேரன்புடன்… தங்களின் விமர்சனம் இன்னும் எழுத உந்துதலை தருகிறது….. மிக்க நன்றி 💖

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button