உலகம்
ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு; அச்சத்தில் சர்வதேசம்

அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானின் புஷேர், ஷபஹார், பந்தர் அப்பாஸ் போன்ற நகரங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 78 பேர் காயமடைந்துள்ளமை மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றதை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதளுக்கு பதிலடியாக அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தொடர் இராணுவத் தாக்குதல்களின் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 12 விகிதம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது
![]()