உலகம்

உக்ரைனின் தாக்குதல்களில் 8,500 ரஷ்யர்கள் உயிரிழப்பு

உக்ரைன் உடனான போரில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8,500 ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இருதரப்பும் 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் உக்ரைனின் கீவ் ஆகிய நகரங்களின் மீது அதிக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த பெப்ரவரி 2022 முதல் 2026 ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலத்தில் மட்டும் உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 30,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 8,434 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்துடன், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மோதல்களில் 373 குழந்தைகள் கொல்லப்பட்டமையும் 1,845 குழந்தைகள் படுகாயமடைந்தமையும் தெரியவந்துள்ளது.

மேலும், 42 ரஷ்ய நகரங்களில் உள்ள மக்கள் கட்டமைப்புகளைக் குறிவைத்து உக்ரைனின் படைகள் தாக்குதல் நடத்தின என குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரஷ்ய தலைநகர் உள்ளிட்ட நகரங்களை நோக்கி ஏவப்பட்ட 28 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.

அத்துடன், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கான்ஸ்டான்டினோவ்கா நகரத்தை ரஷ்ய படைகள் முழுவதுமாகக் கைப்பற்றியுள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button