இலங்கை
தொல். திருமாவளவனை சந்தித்த இலங்கை தமிழ் அரசியல் தலைமைகள்

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழுவினர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின்போது தமிழர் அரசியல் நிலைமைகள், வடக்கு – கிழக்கு மக்களின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக சென்னையில் முதலமைச்சர் ஜோசப் சி.விஜயை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
![]()