பலதும் பத்தும்

அனல் பறக்கும் வெப்பம்; தண்ணீரை பீய்ச்சியடித்து மக்களை குளிர்வித்த பொலிஸ்

ஐரோப்பிய நாடுகள் வரலாற்றில் இல்லாத அளவிலான கடும் வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. இதன் தாக்கமாக, ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாக்சோனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் மோக்கர்ன்-ட்ரூவிட்ஸ் (Möckern-Drewitz) பகுதியில் வெப்பநிலை 41.5 டிகிரி செல்ஸியஸாக பதிவாகியுள்ளது.

சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக பொலிஸார் நவீன நீர்த் தாரை வாகனங்களை பயன்படுத்தி (Water Cannon) பொதுமக்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.

இதனால் பலர் வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் பெற்றதுடன், சிலர் மகிழ்ச்சியுடன் தண்ணீரில் நனைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இதற்கிடையில், உலக வானிலை அமைப்பு (WMO), இந்த கடும் வெப்ப அலை மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், பகல் நேரங்களில் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்கவும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button