கட்டுரைகள்
ஞானியர் முன்னர் கற்றோர் கல்வி பயன் தராது!… கவிதை… அன்பு ஜெயா

பா வகை: கண்ணாட்டிச் சிந்து
கற்றகல்வி ஞானியர்முன் கரையில் ஒதுங்குமே – கண்ணாட்டி
கரையில் ஒதுங்குமே!
கற்றநூலில் ஆழமில்லார் கல்வி மறையுமே – கண்ணாட்டி
கல்வி மறையுமே! (1)
நீண்டுவளர் சிவன்முடியை நினைத்தல் இயலுமே – கண்ணாட்டி
நினைத்தல் இயலுமே!
நீண்டுயர்ந்த அவன்முடியை நீதொடல் இயலுமோ – கண்ணாட்டி
நீதொடல் இயலுமோ! (2)
கற்றறிந்த ஞானியரைக் காணல் இயலுமே – கண்ணாட்டி
காணல் இயலுமே!
கற்றறிந்த ஞானியர்போல் களமுங் காண்பயோ – கண்ணாட்டி
களமுங் காண்பயோ! (3)

![]()