பலதும் பத்தும்

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”

அமெரிக்க ஜனாதிபதியைப் போன்ற தோற்றம் காரணமாக சமூக ஊடகங்களில் விரைவாக பிரபலமடைந்த ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட, அலைபாயும் பொன்னிற முடியுடைய அல்பினோ எருமையின் உடல் குறைந்து வருகிறது.

குறித்த எருமை பிரபலமடைந்ததிலிருந்து, அது வசிக்கும் பங்களாதேஷ் பண்ணைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டம் அந்த விலங்கிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதால், அது எடை இழந்துள்ளதாக அதன் உரிமையாளர் கூறுகிறார்.

அந்த எருமை 1,500 பவுண்டுகள் (680 கிலோ) எடை கொண்டதுடன், மிகவும் அசாதாரணமான தலைமுடியையும் கொண்டுள்ளது.

A caretaker attending to an albino buffalo nicknamed

இதன் காரணமாகவே அதற்கு “டொனால்ட் ட்ரம்ப்” என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.

டாக்காவின் தென்கிழக்கில் உள்ள நாராயண்கஞ்சில் உள்ள ஒரு உள்ளூர் பண்ணையில் வளர்க்கப்பட்ட இந்த எருமைக்கு நான்கு வயது.

இது ஈத் அல்-அதா அன்று பலியிடப்படும் என்று கூறப்படுகிறது.

வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்த எருமையின் புகைப்படங்கள் வைரலானதிலிருந்து சமூக ஊடகங்கள் பரபரப்பாகிவிட்டன.

அல்பினோ எருமைக்கு மெலனின் உற்பத்தி குறைபாடு இருப்பதால், அதன் தோலும் முடியும் பொன்னிறமாகவோ அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவோ இருக்கும்.

எவ்வாறெனினும் குறிதத எருமை எதிர்வரும் மே 27 அன்று ஈத் அல்-அதா பண்டிகையின் போது பலியிடப்படும், மேலும் அது ஏற்கனவே ஒரு கிலோ கிராம் 550 டாக்கா (US$4.50) என்ற விலையில் விற்கப்பட்டுவிட்டதாக உரிமையாளர் கூறுகிறார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button