பலதும் பத்தும்

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்

ஸ்காட்லாந்து அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான ‘இலவச பஸ் பிரயாணத் திட்டம்’ வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளைக் கடந்து, அங்குள்ள மாணவர்களினதும் இளைஞர்களினதும் வாழ்வில் பெரும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 5 வயது முதல் 21 வயது வரையிலான தகுதியுடைய அனைவரும் ஸ்காட்லாந்து முழுவதும் உள்ள எந்தவொரு பஸ் சேவையிலும் கட்டணமின்றி முற்றிலும் இலவசமாகப் பயணிக்க முடியும்.

கட்டணமின்றிப் பயணிக்க முடியும்

இலவச பஸ் பிரயாணத்தைப் பெறுவதற்கு, 5 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் நீல நிற ‘ITSO’ முத்திரையைக் கொண்ட தேசிய உரிம அட்டையை (National Entitlement Card – NEC) வைத்திருக்க வேண்டும்.

இந்த அட்டையைக் காண்பித்து ஸ்காட்லாந்தின் எந்தவொரு பஸ் வலையமைப்பிலும் கட்டணமின்றிப் பயணிக்க முடியும் என ஸ்காட்லாந்து போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்தின் இந்த நீண்ட கால வெற்றிகரமான திட்டத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்திலும் இத்தகையதொரு திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இங்கிலாந்தில் உள்ள 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வரவிருக்கும் ஓகஸ்ட் மாதம் முதல் இலவச பஸ் பிரயாணத் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button