பலதும் பத்தும்

வீடுகளில் கதவுகள் இல்லாத இந்திய கிராமம்.., எங்கு உள்ளது தெரியுமா?

பொதுவாக, இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

அதில், வீடுகளில் கதவுகள் இல்லாத வினோதமான இந்திய கிராமம் குறித்து பார்க்கலாம்.

அதன்படி, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சனி ஷிங்னாபூர் கிராமம் உலகப் புகழ்பெற்ற ஒரு கிராமமாகும்.

 

வீடுகளில் கதவுகள் இல்லாத இந்திய கிராமம்.., எங்கு உள்ளது தெரியுமா? | Which Indian Village With No Doors Or Locks

இந்த கிராமத்தில் அங்குள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் கதவுகள் மற்றும் பூட்டுகள் இல்லாதது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த கிராம மக்கள் சனி பகவான் தங்களின் வீடுகளை காப்பாற்றுகிறார் என்று தீவிரமாக நம்புகின்றனர்.

 

அதனால் பல நூற்றாண்டுகளாக இங்கு கதவுகள் மற்றும் பூட்டுகள் பயன்படுத்தப்படாமல் வருகிறது.

சனி ஷிங்னாபூர் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற சனி பகவான் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 

வீடுகளில் கதவுகள் இல்லாத இந்திய கிராமம்.., எங்கு உள்ளது தெரியுமா? | Which Indian Village With No Doors Or Locks

இந்த கிராமத்தின் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான மரபுகள் காரணமாக இது முக்கிய சுற்றுலா தலமாகவும் மாறியுள்ளது.

இந்த கோவிலில் சில தனித்துவமான சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன.

மேலும், இந்த கோவிலில் உள்ள சனி பகவானின் சிலை சுயம்பு என நம்பப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button