பலதும் பத்தும்

தினமும் ஒரு ஸ்பூன் பூசணி விதைகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தினமும் தர்பூசணி விதை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

பூசணி விதை

தினமும் ஒரு தேக்கரண்டி பூசணி விதைகளைச் சாப்பிடுவது உடலுக்குப் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

இந்த விதையில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை உடலை உள்ளிருந்து வலுப்படுத்த உதவுகின்றன.

தினமும் ஒரு ஸ்பூன் பூசணி விதைகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும்? | Happens If Eat Spoonful Of Pumpkin Seeds Every Day

பூசணி விதையில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், பூசணிக்காய் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசியைத் தடுக்கிறது.

பூசணிக்காயில் உள்ள மெக்னீசியம், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பூசணி விதைகளில் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது, இது இரத்த நாளங்களைத் தளர்த்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது.

பூசணி விதைகள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஒரு சிறந்த ஊட்டச்சத்தாகும். அவற்றில் உள்ள துத்தநாகம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி உதிர்வதைத் தடுக்கவும், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரவும் உதவுகின்றன.

தினமும் ஒரு ஸ்பூன் பூசணி விதைகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும்? | Happens If Eat Spoonful Of Pumpkin Seeds Every Day

எனவே தினமும் ஒரு தேக்கரண்டி பூசணி விதைகளைச் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்மை தரும்.

அவற்றில் துத்தநாகம், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button