பலதும் பத்தும்

பிரித்தானியாவில் முதியவரை அடித்து கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை

பிரித்தானியா லெஸ்டர்ஷயர் (Leicestershire) பகுதியில் உள்ள மதுபானசாலை (Pub) ஒன்றிற்கு வெளியே, 66 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரைத் தாக்கி உயிரிழக்கச் செய்த 37 வயதுடைய நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சில நாட்களுக்கு முன்னதாக, கிரவுன் இன் மதுபானசாலைக்கு அருகில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேதன் கோதார்ட் (Nathan Gothard) என்ற நபர் பலமாகத் தாக்கியதில், டேவிட் டார்க் (David Darke) என்ற முதியவர் உயிரிழந்தார்.

சந்தேகநபர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்பது பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு , அவருக்கு 10 ஆண்டுக்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button