பலதும் பத்தும்

எருமை மாட்டை சமாளித்து கன்று குட்டியை மீட்க போராடிய நபர்!

பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஒரு விதமான சமூக வலைத்தள மோகத்துக்கு அடிமையானவர்களாக தான் இருக்கின்றார்கள்.

கண் முன்னே ஒரு விபத்து நடக்கின்றது என்றால் கூட விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதை விட அதைனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் ஏராளம்.

இப்படியான நபர்களுக்கு மத்தியில் விலங்குகளின் உயிரையும் தன் உயிருக்கு ஒப்பாக நினைக்கும் அரிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அதனை பறைசாற்றும் வகையில், எருமை மாட்டின் கொம்புக்குள் சிக்கிக்கொண்ட கன்று குட்டியின் தலையை, எருமை மாட்டுடன் போராடி நபரொருவர் வெளியில் கொண்டுவந்து கன்று குட்டியை காப்பாற்றிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் குறித்த நபரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button