பலதும் பத்தும்

இணையத்தில் பரவலாகும் இந்திய பிரதமர் மோடியின் காணொளி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 5 நாடுகள் கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக அவர் இத்தாலி தலைநகர் ரோமுக்கு சென்றடைந்துள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மோடியின் பரிசு

ரோமில் விமான நிலையத்திற்கு நேரில் வந்த மெலோனி, பிரதமர் மோடியை வரவேற்றார்.

பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் “Welcome to Rome, my friend!” என்று பதிவிட்டு இரு தலைவர்களுக்கிடையேயான நட்புறவை வெளிப்படுத்தினார்.

 

இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி இத்தாலி பிரதமருக்கு ‘மெலோடி’ என்ற பெயருடைய சாக்லேட் பாக்கெட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

“மெலோடி” என்ற பெயரை கேட்டதும் மெலோனி சிரித்தபடி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த சந்திப்பின் காணொளியை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டு “Meloni + Modi” என்பதைக் இணைத்து “Melodi” என்ற சொல்லை மெலோனி அறிமுகப்படுத்தியிருந்தார்.

பரவலாகும் காணொளி

அதனை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் பிரபலமான மெலோடி சாக்லேட்டை மோடி பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றது.

மேலும், பிரதமர் மோடி மற்றும் மெலோனி ரோமின் புகழ்பெற்ற கொலோசியம் அரங்கத்தையும் பார்வையிட்டனர்.

இணையத்தில் பரவலாகும் இந்திய பிரதமர் மோடியின் காணொளி | Video Pm Modi Memes With Melody Gift For Meloni

மே 15ஆம் திகதி தொடங்கிய பிரதமர் மோடியின் இந்த 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில், அவர் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற இந்தியா–நார்டிக் உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button