பலதும் பத்தும்

இலங்கைக்கு தேசிய விண்வெளி கொள்கை

ஆபத்து முகாமைத்துவம், தொடர்பாடல், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பொருளாதார புத்தாக்கம் ஆகிய முக்கிய துறைகளில் விண்வெளி தொழில்நுட்பத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு என ஒருங்கிணைந்த ‘தேசிய விண்வெளி கொள்கை’யை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கொள்கையின் முக்கிய நோக்கங்கள்
சர்வதேச ஒத்துழைப்பை முறைப்படுத்துதல். உலகளாவிய விண்வெளி நிர்வாகக் கட்டமைப்புகளில் இலங்கையின் பங்களிப்பை மேம்படுத்துதல்.

இலங்கையின் அனைத்து விண்வெளி சார்ந்த செயற்பாடுகளும் சர்வதேச கடப்பாடுகள், ஒப்பந்தங்கள் மற்றும் தரநிலைகளுக்கு அமைய நடைபெறுவதை உறுதி செய்தல்.

இதற்கமைய, தேசிய விண்வெளி கொள்கையைத் தயாரிப்பதற்காக விசேட தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button