பலதும் பத்தும்

நீரிழிவு நோய்க்கு நடைப்பயிற்சி எப்போது மிகவும் நன்மை தரும்?

நீரிழிவு நோய் இருந்தால் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்ச்சி செய்தால் அது நன்மை தரும் என்பதை பார்க்கலாம்.

நீரிழிவு நோய்க்கு நடைப்பயிற்சி எப்போது மிகவும் நன்மை தரும்? | When Is Walking Most Beneficial For Diabetes

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். நீங்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்றாலும், இரத்தச் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்க, உணவுக்குப் பிறகு நடப்பது மிகவும் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நீரிழிவு நோயிளிகள்  சாப்பிடும்போது அவர்களின் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். இதன்போது அசையாமல் உட்கார்ந்திருப்பது இரத்தச் சர்க்கரை அளவை வேகமாக உயரச்செய்யும்.

நீரிழிவு நோய்க்கு நடைப்பயிற்சி எப்போது மிகவும் நன்மை தரும்? | When Is Walking Most Beneficial For Diabetes

இதற்கு சாப்பிட்ட பின்னர் 10-15 நிமிடங்கள் நடப்பது உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதனால் நீங்கள் கலோரிகள் சாப்பிட்டிருந்தாலும் அதன் அளவைக் குறைக்கிறது.

உணவுக்குப் பிறகு 10-30 நிமிடங்கள் மெதுவாக நடப்பது, இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.

நீரிழிவு நோய்க்கு நடைப்பயிற்சி எப்போது மிகவும் நன்மை தரும்? | When Is Walking Most Beneficial For Diabetes

மேலும் உணவிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸை உங்கள் தசைகள் பயன்படுத்திக்கொள்ள உதவுவதோடு, இரத்தச் சர்க்கரையில் ஏற்படும் திடீர் உயர்வுகளையும் தடுக்கிறது.

ஒரு நாளின் இரண்டு முக்கிய உணவுகளான மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பிறகு, நீங்கள் கண்டிப்பாக 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

இது உங்கள் சர்க்கரை அளவைப் பாதிப்பது மட்டுமல்லாமல், வாயுத்தொல்லை, அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றையும் குறைக்கும்.

நீரிழிவு நோய்க்கு நடைப்பயிற்சி எப்போது மிகவும் நன்மை தரும்? | When Is Walking Most Beneficial For Diabetes

ஆனால் அதிகமாகவோ அல்லது கனமான உணவையோ சாப்பிட்ட உடனேயே நடைப்பயிற்சிக்குச் செல்ல கூடாது.

உங்களுக்கு வகை 1 நீரிழிவு நோய் அல்லது குறைந்த இரத்தச் சர்க்கரை அளவு (ஹைப்போகிளைசீமியா) இருந்தால், உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் சுயமாக நடக்கத் தொடங்க வேண்டாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button