பலதும் பத்தும்

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வெள்ளிக்கிழமையும் (15) பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்று  331 ரூபா 15 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

மத்திய வங்கியினால்  வெளியிடப்பட்ட நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323.53 ரூபாவாகவும், விற்பனை விலை 331.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதிக்குப் பின்னர், டொலரின் கொள்முதல் விலை 323 ரூபாவையையும் விற்பனை விலை 331 ரூபாவையும் தாண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

2023 டிசம்பர் 05 ஆம் திகதியன்று டொலரின் கொள்வனவு விலை 323 ரூபாவாகப் பதிவாகியிருந்ததுடன், அதன் விற்பனை விலை 333.20 ரூபாவாகக் காணப்பட்டது.

அதன்படி, 2023 டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகூடிய பெறுமதியைப் பதிவு செய்த முதல் சந்தர்ப்பமாக வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button