இலங்கை

திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகருக்கே உரித்து! 

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் முழுமையான நிர்வாக அதிகாரம் மாநகர சபையிடமே இருக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகரசபைக்கான முதலீடுகளும் சொத்துக்களும் மாநகரசபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டுமே தவிர அதை வேறெவரும் ஆளுகை செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு மதிவதனி தலைமையில் நடைபெற்றது.

அமர்வில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில் யாழ் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் தொடர்பில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நம்பிக்கை நிதியம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு முன்மொழிவொன்றை யோகேஸ்வரி பிரஸ்தாபித்திருந்தார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாநகரத்தின் இதயப்பகுதியில் மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் இந்திய அரசாங்கத்தின் கொடையாக உருவான “யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்” தற்போது ஒரு புதிய நிர்வாகக் கட்டமைப்புக்குள் நுழைக்கப்படுகின்றது.

அத்துடன் இதற்காக ஒரு நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தையும் (Trust Fund) அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும், இந்த நகர்வின் பின்னணியில் உள்ள சில கசப்பான உண்மைகளை நாம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை மக்களின் அடிமட்ட அதிகார அமைப்புகளாகும். அதன்பிரகாரம் மாநகர சபைக்குச் சொந்தமான ஒரு காணியில் அமைந்துள்ள ஒரு கலாசார நிலையத்தை நிர்வகிக்கும் முழு உரிமையும் அந்தச் சபைக்கே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button