பலதும் பத்தும்

ஆயிரமாண்டுகளாக திறக்கப்படாத மர்மக் கதவு

அழியாத மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ள எகிப்தின் கிஸா பிரமிடுக்குள், சுமார் 4,500 ஆண்டுகளாக திறக்கப்படாததாகக் கருதப்படும் சீல் வைக்கப்பட்ட கதவு போன்ற அமைப்பு ஒன்று ரோபோ மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

பிரமிடின் ஆழமான மற்றும் மனிதர்கள் சென்று ஆய்வு செய்வதற்கு ஆபத்தான சுரங்கப் பாதைக்குள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரோபோ ஒன்று அனுப்பப்பட்டது. சுமார் 100 அடி நீளமான அந்தப் பாதையின் இறுதியில் ரோபோ சென்றபோது, அதன் பயணத்தைத் தடுக்கும் வகையில் சுவர் அல்லது சீல் வைக்கப்பட்ட கதவு போன்ற அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

 

அந்தக் கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? என்ற கேள்வி தற்போது ஆய்வாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரமிடின் கட்டமைப்புக்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல், கதவுக்குப் பின்னால் உள்ள பகுதிகளை கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

 

கெய்ரோ அருகே அமைந்துள்ள கிஸா பிரமிடு சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானது. 146 மீற்றர் உயரம் கொண்ட இந்தப் பிரமிடு சுமார் 23 இலட்சம் கற்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கல்லும் சுமார் 2 முதல் 9 தொன் வரை எடை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button