பலதும் பத்தும்

சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்: திகைப்படையச் செய்த ஒரு காட்சி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கண்ட மக்கள் திகைப்படைந்தார்கள்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த வில்லியம் சான் என்பவர், ஓரிடத்தில் பொலிஸ் வாகனங்கள் நிற்பதைக் கண்டுள்ளார்.

அங்கு சேதமடைந்த கார் ஒன்று நிற்பதை கவனித்த அவர், விபத்தில் சிக்கிய ஒரு வாகனம் இங்கே நிற்கிறது, இன்னொரு வாகனம் எங்கே என்று தேட, ஒரு மோட்டார் சைக்கிள் சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருப்பது அவர் கண்ணில் பட்டுள்ளது. 

சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்: திகைப்படையச் செய்த ஒரு காட்சி | Bike Dangling From Traffic Light In Car Crash

அதாவது, காருடன் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள், அந்தரத்தில் பறந்து சிக்னல் விளக்கைச் சென்றடைந்துள்ளது.

விபத்து நடந்தது எப்படி என ஒரு ஊடகம் கூட குறிப்பிடாத நிலையில், அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button