பலதும் பத்தும்

அருவியில் செங்குத்தாக ஏறும் ‘ஷெல்லியர் மீன்கள்’

பொதுவாக நீர்நிலைகளில் மீன்கள் நீந்திச் செல்வதை பார்த்திருப்போம். ஆனால், சின்னஞ்சிறிய மீன் செங்குத்தான அருவியில் பாறைகளைப் பிடித்துக்கொண்டு மலை ஏறுகின்றன எனக் கூறினால் நம்ப முடிகிறதா?

கொங்கோ குடியரசில்தான் இந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.

பெல்ஜியம் மற்றும் லுபும்பாஷி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை வீடியோவாக எடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

ஷெல்லியர் மீன்கள் அளவில் மிகவும் சிறியவை. ஐந்து சென்டிமீற்றர் நீளம் மட்டுமே இருக்கும் இந்த மீன் இனம், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த அதிசயத்தை நிகழ்த்துகின்றன.

தங்கள் துடுப்புகளுக்க அடியில் உள்ள சிறிய கொக்கி போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி பாறைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றன.

இந்த வகை மீன்கள் உடலின் பின்பகுதியை வளைத்து நெளித்து செங்குத்தான பாறைகளில் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்கின்றன.

இந்த வகை மீன்கள் பாறைகளை ஏறி முடிப்பதற்கு கிட்டத்தட்ட பத்து மணித்தியாலம் ஆகும் என்பதால் சிறிய இடுக்குகளில் கூட்மாகப் படுத்து அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்த மீன்களாவன, மழைக்காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை தடுத்து பழைய இருப்பிடத்துக்கே மீண்டும் பாதுகாப்பாகச் செல்வதற்கான முயற்சியே இது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button