பலதும் பத்தும்

பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டம்?

பழைய கட்டிடங்களில் ‘பேய்கள்’ நடமாட்டமா? என்ற கேள்விக்கு கனடா ஆராய்ச்சியாளர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் இன்றும் கேட்டு கொண்டிருக்கிறோம்.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல ஆள் அரவமில்லா இடத்திலோ, சுடுகாடு பக்கத்திலோ, பாழடைந்த கட்டிடங்களிலோ ஏதாவது ஒரு உருவத்தை எவனாவது ஒருவன் பார்த்து விட்டு பேய் இருக்கிறது என்று கதை கட்டி, புரளியை கிளப்பி விடும் சம்பவங்களும் சமுதாயத்தில் நடப்பது உண்டு,

இந்தநிலையில், பழைய கட்டிடங்களில் ‘பேய்கள்’ நடமாட்டமா? என்ற கேள்விக்கு கனடா ஆராய்ச்சியாளர்கள் தெளிவுப்படுத்தியிள்ளனர்.

பழைய கட்டிடங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் ஒருவிதமான இனம் புரியாத பயம் மற்றும் பதற்றத்திற்கு Infrasound எனப்படும் அதிர்வெண் குறைந்த ஒலிகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

மனிதக் காதுகளால் கேட்க முடியாத 20 Hertz-க்கும் குறைவான இந்த ஒலிகள், துருப்பிடித்த குழாய்கள், காற்றோட்ட வசதிகள், இயந்திரங்கள் மூலம் உருவாகின்றது. இந்த ஒலிகள் மனிதர்களின் உடலில் Cortisol (கிற்ஸ்டோல்) எனும் ஹோர்மோனை அதிகரித்து, காரணமே இல்லாமல் எரிச்சல், சோகம், பயத்தை உண்டாக்குவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button