பலதும் பத்தும்
ஐஸ்க்ரீம் கோன் உருவான கதை தெரியுமா?

ஐஸ்க்ரீம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் கோன் ஐஸ்.
கோன் ஐஸ்க்ரீமில் உள்ள கோர்னின் வரலாறு பற்றி பார்ப்போம்.
1904ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பல்வேறு உணவுகள், கண்டுபிடிப்புகள், புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அங்கே ஐஸ்க்ரீம் விற்பனையாளர் ஒருவர் தன் பொருளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
மக்கள் அதிகமாக வந்து ஐஸ்க்ரீம் வாங்கியமையால் அவர் வைத்திருந்த கிண்ணங்கள் அனைத்தும் முடிந்து போயின.
அந் நேரத்தில் ஐஸ்க்ரீம் விற்பனையாளரின் அருகில் இருந்த வஃபிள் தயாரிப்பாளர் ஒருவர் அவர் சுட்ட வஃபிளை எடுத்து அதை உருட்டி கோர்ன் வடிவில் மாற்றினார்.
அதை உடனே ஐஸ்க்ரீம் விற்பனையாளர் பயன்படுத்த தொடங்கினார்.
இதிலிருந்தே கோர்ன்களில் ஐஸ்க்ரீம் வைத்து உண்ணும் பழக்கம் உருவானது.
![]()