பலதும் பத்தும்

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க

உடல் எடையைக் குறைப்பதற்கு தினமும் காலையில் செய்யவேண்டிய சில பழக்கங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடல் எடை

இன்றைய காலத்தில் உடல் எடையகை் குறைப்பதற்கு பலரும் சிரமப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான நபர்களின் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகின்றது.

உடல் எடையைக் குறைப்பதற்கு டயட் என்ற பெயரில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சிலவகையான மருந்துகள் இவைகளை எடுக்கின்றனர்.

அந்த வகையில் உடல் எடையைக் குறைப்பதற்கு காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில செயல்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

எடையை குறைக்க காலையில் என்ன செய்யலாம்?

இரவு உணவு செரிமானமாகி காலையில் வயிறு காலியாக இருப்பதால், அத்தருணத்தில் தண்ணீர் குடிக்கவும். தண்ணீரில் கலோரி கிடையாது என்பதால், எடை குறைப்பதற்கு அதிகளவில் உதவுகின்றது. மேலும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதுடன், கலோரி எரிப்பும் சிறப்பாக இருக்கும்.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

காலை உணவுக்கு முன்பு உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும். உணவுக்கு முன்பு செய்யும் உடலுழைப்பு உடலின் கொழுப்பை எரிக்க அதிகளவில் உதவுகின்றது.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

காலையில் சாப்பிடும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதால், சுறுசுறுப்பாகவும், உடம்பிலுள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு இவற்றினை உடைத்து கலோரி எரிப்பிற்கு அதிகமாக உதவுகின்றது. இதனால் எடையை குறைக்க முடிகின்றது.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

காலை வேலையில் தோலில்படும் சூரிய ஒளியும் கொழுப்பை எரிக்க உதவுகின்றது. காலை வெயிலில் ஒரு 10 நிமிடமாவது இருக்க வேண்டும்.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

காலையில் காபி, டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் சர்க்கரை அளவு அதிகமாகவும், இதில் சேர்க்கப்பட்டுள்ள காபைன், ஃப்ளேவர்கள் 500 கலோரிகள் வரை இருக்குமாம். இவை ஊட்டச்சத்து தேவையை மந்தப்படுத்துவதுடன், வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து, அசிடிட்டு போன்ற பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

காலை வெறும் வயிற்றில் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும். அப்போது உடம்பில் தேங்கியுள்ள கொழுப்பு எரிக்கப்படுவதுடன், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கின்றது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வதால் 300 முதல் 400 கலோரிகள் வரை எரிக்க முடியுமாம்.

மேலும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதால் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்துகின்றது. காலையில் 10 முதல் 15 நிமிடம் நடைபயிற்சியை ஆரம்பித்து, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளவும்.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *