இலங்கை

2.5 மில்லியன் டொலர் காணாமல் போனமை தொடர்பில் அவுஸ்திரேலியாவின் அறிவிப்பு

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போன விவகாரம் குறித்த விசாரணைகளுக்கு உதவத் தயார் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய பணத் தொகையே இவ்வாறு காணாமல் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு செலுத்தப்பட வேண்டிய தொகை காணாமல் போன விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியு டக்வர்த் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கடன் தொகை செலுத்தப்பட்ட போது ஏற்பட்ட மோசடி தொடர்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்திற்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ச்சியாக அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என உயர்ஸ்தானிகர் டக்வர்த் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *