உலகம்

லெபனான், இஸ்ரேலிய தலைவர்கள் வௌ்ளை மாளிகைக்கு!

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நீண்டகால அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் எதிர்வரும் வாரங்களில் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஹிஸ்புல்லாவைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

லெபனானில் நிலவும் சிக்கல்களைச் சீர்செய்ய அந்த நாட்டுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம்.

ஈரானுடன் நாம் முன்னெடுத்து வரும் பணிகளுடன் இதையும் ஒரே நேரத்தில் செய்து முடிப்பது ஒரு அற்புதமான விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஓவல் அலுவலகத்தில் டிரம்ப், வான்ஸ் மற்றும் ரூபியோ ஆகியோருடன் இணைந்து பேசிய இரு நாடுகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்கள், போர்நிறுத்த நீடிப்புக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

உங்களது தலைமையின் கீழ் ஈரான் மிகவும் பலவீனமடைந்துள்ளது. ஹிஸ்புல்லாவை முடக்குவதும், அவர்களது ஆதிக்கத்திலிருந்து லெபனானை விடுவிப்பதும் இப்போது சாத்தியமாகியுள்ளது என அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதுவர் லைட்டர் கூறியுள்ளார்.

மேலும், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா எனும் இந்த நச்சுத் தாக்கத்தை அகற்றுவதில் இஸ்ரேலும் லெபனானும் இணைந்து செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *