முச்சந்தி

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று 07 ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்டக்களப்பில்

பல்வேறு நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவில் உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் தி.டினேஸ் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநகரசபையின் முதல்வர் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் சத்தியசீலன் ஆகியோரினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலக்குவைக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் இன்று காலை ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது.

சீயோன் தேவாலயத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான இலக்காக காணப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பிரதான ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது

தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து காலை 8.45 க்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மற்றுமொரு இலக்காக காணப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திலும் இன்று காலை ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button