பலதும் பத்தும்

12 அடி சரஸ்வதி சிலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு – பட்டிருப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் 12 அடி சரஸ்வதி சிலை திறந்து வைக்கப்பட்டது.

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் 2017 க.பொ.த சாதாரண தர மாணவர்களின் அனுசரணையில், பிரதி அதிபர் சு.ஜெயக்குமார் தலைமையில் சரஸ்வதி சிலை திறந்து வைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் பிரணவரூபன், மற்றும் முன்னாள் அதிபர் அருள்ராசா என பலர் கலந்து கொண்டனர்.

அதிதிகள் மலர் மாலை அணிவித்து, பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு, 12 அடி சரஸ்வதி சிலை அதிதிகளால் திரை நீக்கம் செய்யப்பட்டது.

அதன்பின்  பூஜை வழி பாடுகள் இடம்பெற்று மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button