பலதும் பத்தும்

உடல் நலத்தை மேம்படுத்தும் தினசரி பழக்கங்கள்!

சாப்பிடும் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கவும். செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

இரவு 10 மணிக்குள் உறங்கவும். மூளையின் ஆரோக்கியத்தையும், ஹார்மோன் சமநிலையையும் பாதுகாக்கும். தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யவும். இதயம், மனம் மற்றும் எலும்புகள் பலப்படும்.

தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நில்லுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மனநிலை மேம்படும்.

நடைப்பயிற்சிக்கு பிறகு பழங்கள் சாப்பிடுங்கள். மன அமைதி கிடைக்கும். 5 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும்.

குடல் ஆரோக்கியத்தை பராமரியுங்கள். மனநிலை, சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

இந்த சிறிய தினசரி பழக்கங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *