பலதும் பத்தும்
வீட்டுக்கு வீடு விமானம் – எங்கு தெரியுமா?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் என்ற சிறிய கிராமத்தில் வெளியிடங்களுக்குச் செல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விமானத்தை வைத்துள்ளனர்.
விமானிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விபரங்கள் தெரிந்தவர்களை தவிர வேறு யாரும் விமானத்தை இயக்க முடியாது.
மேலும், குறித்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியாக அல்லது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக இருக்கின்றனர். இங்கு வசிக்கும் அனைவரும் தங்களுக்கென்று சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகிறார்கள்.
அப்பகுதியில் மொத்தம் 124 வீடுகள் உள்ளதுடன் விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறங்கிக் கொள்ளவும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு செல்லவும் வசதியாக இங்கு 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
![]()