பலதும் பத்தும்

புத்தளத்தில் பணப்பையை தொலைந்த யாழ்ப்பாண வாசி; பொலிஸ் அத்தியட்சகரின் நெகிழ்ச்சி செயல்

யாழ்ப்பாண வாசியின் தொலைந்து போன பணப்பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம் பணத்துடன் தனது பணப் பையை தொலைத்து விட்டு தேடி அலைந்துள்ளார்.

பணி நிமித்தம் புத்தளத்திற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,

பணப் பையொன்று வீதியில் விழுந்து கிடைப்பதை அவதானித்து அதனை எடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கைப்பைக்குள் இருந்த ஆவணங்களை கொண்டு அது யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதனை நேற்றையதினம் தொலைத்த பணப்பை உரிமையாளரிடம் கையளித்தார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் இச் செயலுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *