உலகம்

ஈரான் சென்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதி!

மத்திய கிழக்குப் போர் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் முறிவடைந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் உள்ளிட்ட குழுவினர் (15) ஈரானுக்குச் சென்றுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி உள்ளிட்ட குழுவினர் ஈரான் அதிகாரிகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவும் தற்போதைய பதற்றமான சூழலைத் தணிப்பதற்கு பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயற்பட்டு வருகின்றது.

இதற்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 11ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கான சூழலை உருவாக்கும் நோக்கில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *