கவிதைகள்

என்றாலும் அக்காலம் இனிப்பாக இருக்கு!…. கவிதை… ஜெயராமசர்மா

கல்லும் தெரியாது முள்ளுந் தெரியாது
காலிலே செருப்புமின்றி எப்படித்தான் திரிந்தோமோ
குழங்கண்ட இடமெல்லாம் குதித்துமே நீந்திடுவோம்
நேரங்கெட்ட நேரத்தில் நிறையவே சாப்பிடுவோம்

ஊருறங்கும் வேளை ஊர்சுற்றித் திரிவோம்
ஒழுங்கையெலாம் நாங்கள் ஓடியே திரிவோம்
காலோய்ந்த பின்னால் வீடுவந்து படுப்போம்
கட்டிலும் இல்லை மெத்தையும் இல்லை

கட்டாந் தரையே எங்கள் கட்டிலாகும்
எறும்பு கடிக்கும் நுளம்பும் கடிக்கும்
அவைப்பாட்டில் கடித்து அவையலுத்துப் போகும்
ஓடியலைந்த களைப்பில் கும்பகர்ணன் ஆகிடுவோம்

காலையிலே அம்மா காளியாகி நிற்பா
கோபமுடன் குடத்து நீரைக்கொட்டி விடிவா
துடித்துப் பதைத்து அம்மாவைப் பார்ப்போம்
மாகாளி வடிவவமாய் மாறிநிற்பா அம்மா

பழையபடம் புதுப்படம் எதுவும் விடமாட்டோம்
பள்ளிக்குப் போகாமல் படம்பார்க்கப் போவோம்
அடுத்தநாள் பள்ளிசென்றால் ஆசிரியர் கேட்பார்
அப்பாவின் அம்மா செத்ததாய் சொல்லுவோம்

ஆசிரியர் விடமாட்டார் வீடுவந்து நிற்பார்
அப்பாவின் அம்மா வாசலிலே இருப்பார்
ஆசிரியர் கோபமாய் அனைத்துமே சொல்வார்
அப்பாவோ அசுரனாய் ஆகியே விடுவார்

பொய்சொல்லி பொய்சொல்லி போக்கினோம் பொழுதை
தப்பிதமே என்றுநாம் எண்ணியதே இல்லை
இப்போது நினைத்தாலும் எப்படித்தான் செய்தோம்
எனும்நினைப்பே மனமதிலே எழுந்து வருகிறதே

இப்போது நினைத்தாலும் அக்காலம் வருமா
அக்கால நினைவுகள் அடிமனத்தில் இருக்கிறது
காரிருக்கு வீடிருக்கு கலகலப்பும் இருக்கு
என்றாலும் அக்காலம் இனிப்பாக இருக்கு!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

But those times will be sweet!

Mahadeva Iyer Jayaramasarma
Director of Tamil Language Education, Melbourne, Australia

We don’t know a stone or a thorn
How can we walk without shoes on our feet?
We will jump and swim wherever we want
We will eat a lot at the right time

We will flirt while we are sleeping
We will run around in circles
We will come home after we have slept
There is no bed, no mattress

The floor is our bed
Ants and mosquitoes will bite
We will bite and vomit in the streets
We will become Kumbhakarna in the fatigue of running

In the morning, will my mother become Kali?
She will angrily pour water from a jug and wake up
We will see my mother with a throbbing heart
Will my mother change into the shape of Makali?

Old film, new film We won’t let go
We’ll go to the movies instead of going to school
The teacher will ask if we go to school the next day
We’ll tell them that Dad’s mother is dead

The teacher won’t let go and he’ll come home and stand there
Dad’s mother will be at the door
The teacher will tell us everything angrily
But Dad will turn into a monster and let go

We spent our time lying and lying
We never thought it was a mistake
Even when I think about it now, how did we do it
The thought keeps coming to my mind

Even when I think about it now, will that time ever come
The memories of that time are still in my mind
There’s a lot of chaos in the car and at home
But those times were sweet!

Loading

3 Comments

  1. நினைத்தாலே நெஞ்செல்லாம் இனிக்கிறது. அக்காலம் என்று நமக்கு இனிப்பது வளமோ, பணமோ இல்லை. மனம் தான். இளமையான மனம். குறை தெரியா மனம். நல்ல நினைவுகளை தந்தமைக்கு நன்றி.

  2. உண்மையில் மனம் நிறைய வைத்த கவிதை. மனம் 45 வருடம் பின்னோக்கி சென்று மகிழ்ச்சியில் திளைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *