பலதும் பத்தும்

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கின்றதா?; அருமையான டிப்ஸ் இதோ

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக காணப்பட்டால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஹீமோகுளோபின்

உங்களுக்கு அடிக்கடி சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல், தலைசுற்றல், வெளிறிய சருமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உங்களது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கலாம்.

ஆண்களுக்கு 13.8 முதல் 17.2g/dL வரையிலும், பெண்களுக்கு 12.1 முதல் 15.1 g/dL வரையிலும், குழந்தைகளுக்கு 11 முதல் 16 g/dL வரையிலும் ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டுமாம்.

ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் ரத்தப்போக்கு நாள்பட்ட நோய்கள், அனீமியா போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் மூச்சுத்திணறல், தலைசுற்றல், பிரச்சனையும் ஏற்படும்.

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கின்றதா? அருமையான டிப்ஸ் இதோ | Increase Hemoglobin Levels Only 7 Days

எவ்வாறு சரிசெய்யலாம்?

ஹீமோகுளோபின் அளவினை அதிகரிப்பதற்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது அவசியம் ஆகும். குறிப்பாக கேரட் மற்றும் பீட்ரூட் ஜுஸ் குடிப்பது நல்ல பலனை அளிக்கும்.

கற்றாழை, லெமன் கிராஸ், மாதுளை மற்றும் பீட்ரூட் ஜுஸ் போன்றவை ரத்தப்பற்றாக்குறையைச் செரிசெய்வதற்கு உதவுகின்றது.

அத்திப்பழம் மற்றும் பேரீட்சை பழங்களில் அதிகளவு இரும்புச்சத்து உள்ள நிலையில், இவற்றினை சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *