இந்தியா

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு, ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டி!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை காரணமாக வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை.  2 ஆவது நாளாக வேட்பு மனுதாக்கல் நடந்தது.  (03) புனித வெள்ளி அரசு விடுமுறை என்பதால் மனு தாக்கல் நடைபெறாது.  (04) மனு தாக்கல் நடைபெறும்.  அரசு விடுமுறை ஆகும். கடைசி நாளாக வருகிற 6 ஆம் திகதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது. எனவே மனு தாக்கலுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே வேட்பாளர்கள் மும்முரமாக மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். 10,000 ரூபா டெபாசிட் தொகையையும் செலுத்தி, உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார். மாற்று வேட்பாளராக கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் முடிந்த பின், விஜய் மரக்கடை பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களால் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி உள்ளது. இதன்படி விஜய், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குற்ற வழக்குகளின் விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில் 2 வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் தன் மீது குற்ற வழக்கு இல்லையென விஜய் தெரிவித்திருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதிக்கான தனது 2 ஆவது வேட்புமனுவில், மார்ச் 30 ஆம் திகதி பெரம்பூர் பரப்புரையின்போது ஒரு வழக்கும், 2025 ஆகஸ்டில் நடந்த மதுரை மாநாடு தொடர்பான ஒரு வழக்கும் இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நபர், ஒரு இடத்தில் ‘வழக்கு இல்லை’ என்றும், இன்னொரு இடத்தில் ‘வழக்கு உண்டு’ என்று தெரிவித்தால், குறிப்பிட்ட வேட்புமனு நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு நான்கு செட் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். விஜய் இதுவரை பெரம்பூரில் இரண்டு செட் மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளார். மீதமுள்ள இரண்டு செட்களில், மதுரை வழக்கை குறிப்பிட்டு சரியான தகவல்களுடன் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தால் இந்த பிழையை சரிசெய்துவிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button