பலதும் பத்தும்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த எம்.எஸ்.தோனி…!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி, தசைப்பிடிப்பு காயம் (Calf Strain) காரணமாக ஐபிஎல் 2026 தொடரின் ஆரம்பக்கட்ட சுமார் ஆறு போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் ஏப்ரல் 14ஆம் திகதி நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காயத்திலிருந்து மீள்வதற்கான தீவிரப் பயிற்சியில் (Rehab) ஈடுபட்டுள்ள தோனி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டிக்காகக் கௌஹாத்திக்குச் செல்லவில்லை.

தோனி இல்லாத நிலையில் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பைச் சஞ்சு சாம்சன் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் அணியிடமிருந்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வர்த்தகம் (Trade) செய்திருந்தது.

ருதுராஜ் கெய்க்வாட் அணியை வழிநடத்தினாலும் களத்தில் தோனியின் வழிகாட்டல் இல்லாதது அணிக்குப் பெரும் குறையாகப் பார்க்கப்படுகிறது.

தோனியின் காயம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அணியின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸ் (Dewald Brevis) பயிற்சியின்போது விலா எலும்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகச் சில போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ள இச்சூழல், நடப்புத் தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணிக்கு ஒரு சவாலான தொடக்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *