பலதும் பத்தும்

உள்ளங்கையில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பத்திரம்

கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் பிரச்சனைகள் இருந்தால் அது நமது கைகளில் சில அறிகுறிகளை காட்டும் எனப்படுகின்றது.

உள்ளங்கையில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பத்திரம் | Palm Symptom Of Liver Damage Doctors Warn

கல்லீரல் நோய்

கல்லீரல் ஒவ்வொரு நாளும் நம் உடலில் நூற்றுக்கணக்கான முக்கியப் பணிகளை அமைதியாகச் செய்யும் ஒரு உறுப்பாகும். இரத்தத்தைச் சுத்திகரிப்பது, செரிமானத்திற்கு உதவுவது, மற்றும் ஹார்மோன் சமநிலையைப் பராமரிப்பது ஆகிய பல வேலைகளை இது செய்கிறது.

இந்த கல்லீரல் மோசமடைய தொடங்கினால் இது விரைவான அறிகுறிகளை காட்டாது. இதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சில அறிகுறிகளை காட்டும் இது பொதுவான அறிகுறிகள் என்பதால் மக்கள் இதை புறககணிப்பார்கள்.

அதன்படி கல்லீரல் பாதிப்பிற்குள்ளாகும் போது நமது கைகளில் சில அறிகுறிகள் காட்டுமாம். அப்படி காட்டும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உள்ளங்கையில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பத்திரம் | Palm Symptom Of Liver Damage Doctors Warn

கைகளில் காட்டும் அறிகுறி

மருத்துவர்களின் கூற்றுப்படி, கைகள் நமது உள் ஆரோக்கியத்தின் கண்ணாடி என கூறுகின்றனர். உள்ளங்கைகளின் நிறம், நகங்களின் வடிவம் மற்றும் விரல்களின் அசைவு ஆகியவை கல்லீரல் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் குறிக்கும்.

ஆய்வின்படி , சிவந்த உள்ளங்கைகள் மற்றும் நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் நாள்பட்ட கல்லீரல் நோயின் அறிகுறி எனப்படுகின்றனது.

உள்ளங்கையில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பத்திரம் | Palm Symptom Of Liver Damage Doctors Warn

விரல்களின் வளைவு அல்லது மரத்துப்போதல்

  • உங்கள் விரல்கள் படிப்படியாக உள்நோக்கி வளையத் தொடங்கினாலோ அல்லது உங்கள் உள்ளங்கையில் ஒருவித இழுவை உணர்வை நீங்கள் உணர்ந்தாலோ, உங்களுக்கு டுபுய்ட்ரென் சுருக்கம் (Dupuytren’s contracture) இருக்கலாம். உள்ளங்கையின் கீழ் உள்ள தோல் தடித்து கடினமாகும் போது இந்த நிலை ஏற்படுகிறது. சிரோசிஸ் போன்ற நாள்பட்ட கல்லீரல் நோய்கள் உள்ளவர்களுக்கும், அதிகமாக மது அருந்துபவர்களுக்கும் இது பொதுவாகக் காணப்படுகிறது.
  • வெள்ளை நகங்கள் மற்றும் அதன் மேல் ஒரு இளஞ்சிவப்பு கோடு நகங்கள் பெரும்பாலும் வெண்மையாகவும், அவற்றின் நுனிகளில் லேசான இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறக் கீற்றுகளுடனும் காணப்பட்டால் கல்லீரல் நோயின்போது ஏற்படும் இரத்த ஓட்டம் மற்றும் புரத அளவுகளில் உள்ள சீர்குலைவுகளால் இந்த மாற்றம் ஏற்படுகிறது.

உள்ளங்கையில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பத்திரம் | Palm Symptom Of Liver Damage Doctors Warn

 உயர்ந்த மற்றும் வட்டமான நகங்கள்

நகங்களும் விரல்களும் வீங்கியும் காணப்படுவது பொதுவாக நுரையீரல் அல்லது இதய நோயுடன் தொடர்புடையது, ஆனால் இது நாள்பட்ட கல்லீரல் நோய் இருந்தாலும் வரும். இந்த நிலை தொடர்ந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *