இலக்கியச்சோலை

மருதமுனையில் “‘உயிர்த்தெழும் சருகுகள்’” கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட தமிழ் பாட ஆசிரியை பாத்திமா ஸூபா தல்ஹா எழுதிய “உயிர்த்தெழும் சருகுகள்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, இன்று (28) சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Renge View சிறிலங்கா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்நூல், கவிதாயினியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். இதற்கு முன்னர் அவர் “சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” எனும் கவிதை நூலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான எ. முஹம்மட் அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை ஊடகவியலாளர் றாசிக் நபாயிஸ் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்துகொண்டார். மேலும், கௌரவ விருந்தினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து சிறப்பித்தார்.

நூலின் வெளியீட்டாளர் உரையை டாக்டர் எஸ்.எம். தல்ஹா நிகழ்த்தியதுடன், நூல் தொடர்பான ஆய்வுரையை ஆசிரிய வளவாளரும் இலக்கிய விமர்சகருமான ஜெஸ்மி எம். மூஸா வழங்கினார்.

இந்நிகழ்வை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எல்.எம். ஷினாஸ் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கவிதை இலக்கியத்தை நேசிக்கும் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வு, இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *